† விபூதிப் புதன் †
பாஸ்காவுக்கு ஆயத்தக் காலம் தான் தவக்காலம். இத்தவக்காலம் விபூதிப் புதனிலிருந்து ஆரம்பமாகிறது. இக்காலம் அருளின் காலம், இரக்கத்தின் காலம், மன்னிப்பின் காலம், கடவுள் நம்மைத் தேடி நம்மை மீட்கும் காலம், கடவுளின் அருளை, கனிவை, இரக்கத்தை, மன்னிப்பை, அன்பை அதிகதிகமாக அனுபவிக்கும் காலம். இயேசுவின் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளான அவரின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு எனும் மறைநிகழ்ச்சிகளைத் தகுதியான உள்ளத்துடன் கொண்டாட நம்மைத் தயாரிக்கும் காலம். நம் ஆன்மீக பயணத்தின் பழையன உதிர்ந்து, பழைய பாவநாட்டங்கள், பாவ வழக்கங்கள், உதிர்ந்து, புத்துயிர் துளிர்க்கும், ஆன்மீக வசந்த காலம் தான் தவக்காலம். புது சிந்தனைகளுடன், புது தெம்புடன், புது பலத்துடன், புது சக்தியுடன், புது வாழ்வை ஆரம்பிக்கும், நோக்குடன் நமக்கு கொடுக்கப்பட்ட காலம் தவக்காலம்.
✠ தவக்கால வரலாற்றுப் பின்னணி ✠
ஆதித்திருச்சபையிலே வருடத்திற்கு ஒரு முறை மட்டும்தான் பெரியவர்களுக்கு திருமுழுக்குக் கொடுத்தார்கள். புதுக்கிறிஸ்தவர்கள் தம்மை நாற்பது நாட்கள் தயாரித்து, ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவன்று திருமுழுக்குப் பெறுவர். எனவே தவக்காலம் திருமுழுக்குத் தயாரிப்பு காலம். ஆதித் திருச்சபையிலே கிறிஸ்தவர்கள் ஆடம்பரமாக கொண்டாடிய ஒரே ஒரு பெருவிழா உயிர்ப்பு பெருவிழாத்தான். அந்த உயிர்ப்பு பெருவிழா அர்த்தத்துடன் கொண்டாட நீண்ட தயாரிப்பு காலம்தான் தவக்காலம். அதனால்தான் பாஸ்கா ஆயத்த காலம் என்கிறார்கள். தவக்காலம் பாவப்பரிகார காலம், பெரிய பாவம் செய்தவர்களை கிறிஸ்தவ சமூகத்திற்கு புறம்பாக்கிட அவர்கள் மீண்டும் ஒப்புரவாக விரும்பினால் நாற்பது நாட்கள் கடின தபசு, நோன்பும் ஒரு வேளை உணவு மட்டும் உண்டு பாவப்பரிகாரத்தைத் தேடி கொள்வர். செபமும், தபமும் தான் பாவப்பரிகாரத்தின் அடையாளங்கள். தவக்காலம் கடின தபசுக்காலம், பெரும்பாவிகளுக்கு திருநீற்றுப் புதனன்று பரிகார உடைகொடுத்து தலையில் சாம்பல் பூசி, அவர்கள் கோயிலிருந்து அழைத்துச் சென்று ஊருக்கு வெளியே விட்டு விடுவார்கள். நாற்பது நாட்கள் அவர்களை ஊருக்கு வெளியே இருக்கும்போது, கோயிலுக்கு வருபவர்களைப் பார்த்து தங்களுக்காக கடவுளிடம் வேண்டச் சொல்வார்கள். இவர்கள் நாற்பது நாட்கள் கடின தபசுக்குப் பிறகு உயிர்ப்புப் பெருவிழா இரவு திருவிழிப்பு சடங்கின்போதுதான். சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். தனி மனிதனின் பாவம், சமூகத்தைப் பாதிக்கிறது. தனி மனிதனின் மனந்திரும்புதலுக்கும், சமுதாயத்திலுள்ள அனைவரும் பரிந்து பேச வேண்டுமென்ற சமூக உணர்வை ஏற்படுத்துகின்ற காலம்தான் தவக்காலம்.
✠ நாற்பது நாட்கள் ✠
தவக்காலம் என்பது நாற்பது நாட்களைக் கொண்டது. இதனை விபூதிப்புதனிலிருந்து பெரிய வெள்ளி வார ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்து கணக்கிட்டால் நாற்பது நாட்கள் வரும். ஒவ்வொரு ஞாயிறும் ஆண்டவரின் உயிர்ப்பு ஞாயிறு என்பதால், நாம் ஞாயிற்றுக்கிழமைகளைக் கணக்கிடுவதில்லை. இந்த நாற்பது நாட்களுக்கும் விவிலிய வரலாற்றுப் பின்னணி உண்டு.
✠ நோவா காலத்தில் நாற்பது நாட்கள் இரவும், பகலும் மழை பெய்தது.
✠ இஸ்ரயேல் மக்கள் பாலைவனத்தில் நாற்பது ஆண்டுகள் பயணம் செய்தனர்.
✠ மோயீசன் சீனாய் மலையில் கடவுளின் உடன்படிக்கை பலகையை, பத்துக் கற்பனைகளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு, நாற்பது நாட்கள் இரவும் பகலும் உண்ணாமலும், தண்ணீர் குடியாமலும் இருந்தார் (வி.ப 2:18, 34, 28)
✠ எலியா நாற்பது நாட்கள் உண்ணாமலும், குடியாமலும், தொடர்ந்து நடந்து சென்று ஒரேப் என்ற கடவுளின் மலையை அடைந்தார்.
✠ எசேக்கியேல் இஸ்ரயேல் மக்களின் சுமையை நாற்பது நாட்கள் சுமந்தார் (எசே 4:6)
✠ ஆண்டவர் இயேசு தம் பணிவாழ்வினை தொடங்குமுன் தயாரிப்பாக நாற்பது நாட்கள் தவமிருந்து ஆவியாரால் நிரப்பப்பட்டு வழிநடத்தப்பட்டார். சாத்தானின்
சோதனைகளை முறியடித்தார்.
✠ இங்கு நாற்பது நாட்கள், நாற்பது ஆண்டுகள் என்பது மணிக்கணக்கையோ நேரத்தையோ குறிப்பது அல்ல, மாறாக இறைவன் வழங்கிய அருளின் காலத்தைக் குறிக்கிறது.
✠ விபூதி - திருநீறு - சாம்பல் ✠
அடையாளங்களால் பின்னிப்பிணைக்கப்பட்ட மனித வாழ்விலே மாலைகள் அன்பளிப்புகள், திருவிழாக்கள் எல்லாமே அடையாளங்கள்தான். அதேபோல் நம் அருள்வாழ்வும் அடையாளங்களால் அர்த்தமும், ஆழமும் பெறுகிறது.
✠ விபூதி - வெறுமையின் ✠
ஒன்றுமில்லாமையின் அடையாளம் விவிலியத்தில் விபூதி மனிதனுடைய நிலையற்ற தன்மையையும், குறைநிறையையும் முற்றிலும் சார்புடைய நிலையையும், பாவதாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய பலவீன நிலைகளையும் குறிக்கின்றது.
உ + ம் : ஆபிரகாம் தன்னை ஆண்டவர் முன் புழுதிக்கும், சாம்பலுக்கும், சமமாயிருக்கிற அடியேன் என்று தனது அற்பமான நிலையை ஏற்றுக்கொள்கின்றார் (தொ.நூ 18:27)
மனிதர்களின் மூதுரைகள் சாம்பலை ஒத்த பழமொழிகளே, யோபு 13:21 என்று யோபு மனிதனின் உறுதியற்ற நிலையை பறைசாற்றுகிறார்.



0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு