புதன், 10 பிப்ரவரி, 2016

தவக்காலம் மனமாற்றதிற்கான காலம் †



† தவக்காலம் மனமாற்றதிற்கான காலம் †
நாம் எல்லோருமே பாவிகள் தான்,சொல்லாலும் செயலாலும் கடமைகள் தவறியதாலும் பாவங்கள் பல செய்து கொண்டிருக்கிறோம்,இந்த பாவ வாழ்க்கையிலிருந்து மனமாற்றம் அடைந்திட,கடவுள் கொடுத்திருக்கிற ஓர் அரிய வாய்ப்பு தான் தவக்காலம்.
இந்த நாள்களை முழுமையாக பயன்படுத்தி,ஜெப தவ நோன்பிருந்து முழுமையான மனமாற்றமடைந்து இறையருளை நிறைவாக பெறுவோம்.
''...ஒரு குறிப்பிட்ட நாளை சிறப்பாக கடைபிடிப்பவர் ஆண்டவருக்காகவே அப்படி செய்கிறார் ....உரோ 14;6''என்கிறது பைபிள்.
# நீங்கள் மது.புகை,போதைபாக்கு,புகையிலை வஸ்துக்களுக்கு அடிமையானைவரா
# பிள்ளைகளை கூட சரிவர கவனிக்காமல் ,ஜெபிக்கவும் நேரம் ஒதுக்காமல் தொலைக்காட்சி தொடரிலே மூழ்கி கிடப்பவரா
‪#‎கடவுள்‬ கொடுத்திருக்கிற கொடைகளுக்காக கடவுளுக்கு நன்றி
கூறி நிறைவோடு வாழ்வதை விட்டு விட்டு, பிறரை பார்த்து பொறாமை கொள்பவரா
‪#‎இன்னும்‬ சொல்லமுடியாத பாவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருபவரா
மனம் மாற்றம் அடைவோம் .
ஐயோ என்னால் இந்த தீய பழக்கங்களை விடமுடியவில்லை ஆகவே நான் இப்படியே இருந்து விடுகிறேன் ,மனம் மாற்றம் என்பது பேசுவதற்கு நல்லாதானிருக்கு, ஆனால் நம்மால் முடியாதது என்கிறீர்களா
இயேசுவுக்காக தலை வெட்டப்பட்ட புனித அருளானந்தர்
,கடுமையாக சித்திரவதை அனுபவித்து துப்பாக்கியால் சுட்டு கொல்லபட்ட அருளாளர் தேவசகாயம்பிள்ளை ,
இவர்களை நினைத்து பாருங்கள்
இயேசுவுக்காக மரண வேதனையை கூட புனிதர்களால் தாங்க முடிந்திருகிறது என்றால்
,நம்மால் இந்த சிற்றின்பங்களை கூடவா இயேசுவுக்காக விட்டுவிட முடியாது???
சிந்திப்போம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு