வியாழன், 20 செப்டம்பர், 2012

நாற்பதாவது ஆண்டு குருத்துவ நிறைவு

நாற்பதாவது ஆண்டு குருத்துவ நினைவு தினம்  
Photo : அருட் தந்தை தேவராஜன் அடிகளாரின் 40 வது குருத்துவ நினைவு தின வாழ்த்துக்கள்       

முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி 
முகில் கண்டு ஆடும் மயிலுக்கு 
போர்வை தந்து மகிழ்ந்தான் பேகன் 
சாவா வரம் கொண்ட நெல்லிக்கனியை 
தான் உண்ணாமல் தமிழுக்கு ஈந்தான் அதியமான் 
இக்கடையேழு வள்ளல்களை யாம் கண்டதில்லை 
யாம் கண்ட கலியுக வள்ளல் நீர்

வாக்குறுதி தந்து வழி மறந்து போவோர் பலர் 
உங்கள் சொல்லுறுதி கண்டு வியந்தோம் யாம் 
தேடாது கிடைத்த அமிழ்தம் போல் 
வாராது வந்த மாமழை போல் 
எதிர்பாராது உதவிக்கரம் தந்த வள்ளல் நீர் 

மாறாது மாறாது உம் குணம் என்றும் 
மறையாது மறையாது உம் புகழ் என்றும் 
பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூற்றாண்டு 
நீர் வாழ்வாங்கு வாழ்ந்திட 
அகம் மகிழ்ந்து உளம் நிறைந்து வாழ்த்துகிறேன்
மயிலிட்டி, பலாலி, ஊறணி, பேசாலை, முருங்கன் பங்கு மக்கள் இணைந்து நடாத்தும்
அருட்திரு தேவராஜன் அவர்களின் நாற்பதாவது ஆண்டு குருத்துவவாழ்வின் நினைவு தினம்.
எமது முன்னாள் பங்குத்தந்தையை நன்றியுடன் வாழ்த்த உங்கள் அனைவரையும் பாரிஸ் நகருக்கு அழைக்கின்றோம்

20.10.2012    பாரிஸ் புனித சூசையப்பர் ஆலயம்
161 Rue Saint Maur
75011 PARIS ( Metro: Goncourd )
FRANCE.

காலை 11:00 மணிக்கு நன்றித்திருப்பலி ஆரம்பமாகும்.
(குறிப்பிட்ட நேரத்தில் திருப்பலி ஆரம்பமாகும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்).

தொடர்ந்து உணவுப்பரிமாறலுடன், கலைநிகழ்வுகளும், நினைவுகள் பரிமாற்றமும், இடம் பெறும்.
இந்நிகழ்வுகளில் கலந்து சிறப்பிக்க விரும்புவர்கள் எங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
இந்நிகழ்வின்போது எம்மோடு சுவாமியார் வாழ்ந்த காலங்களை பதிவாக்க இருப்பதால் உங்கள் ஆக்கங்களை எங்களுக்கு அனுப்பி வைக்குமாறு அல்லது எங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
ஆக்கங்கள் ஒக்டோபர் 6ஆம் திகதிக்கு முன்பு எங்களுக்கு கிடைக்கவேண்டும்
மேலும் அடிகளார் எமது நாட்டில் கண்பார்வையற்றோர் விதவைகள் அனாதைகள் போன்ற யாருமற்றோர்க்கு தனது சேவைகளை செய்து கொண்டிருப்ப்பதால் இந்நிகழ்வின் நினைவாக அவரவர்கள் தாங்கள் விரும்பும் ஒரு தொகையை அவருக்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்



soundararjah manuel(France-Myliddy)
Tlf:0033160791274 : sountha@live.fr
www.sounthyen.com

Hentry (France-Urany)
Tlf : 0033952008445 : philip_rajkumar2000@yahoo.com

J.Ratnarajah (Norway-urany)
Tlf : 004721697899/90086841 : jvratna@gmail.com
www.urany.com

அருட் தந்தை தேவராஜன் அடிகளாரின் 40 வது குருத்துவ நினைவு தின வாழ்த்துக்கள்

வாழ்த்து மடல் 

 

அருட் தந்தை தேவராஜன் அடிகளாரின் 40 வது குருத்துவ நினைவு தின வாழ்த்துக்கள்      

முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி
முகில் கண்டு ஆடும் மயிலுக்கு
போர்வை தந்து மகிழ்ந்தான் பேகன்
சாவா வரம் கொண்ட நெல்லிக்கனியை
தான் உண்ணாமல் தமிழுக்கு ஈந்தான் அதியமான்
இக்கடையேழு வள்ளல்களை யாம் கண்டதில்லை
யாம் கண்ட கலியுக வள்ளல் நீர்

வாக்குறுதி தந்து வழி மறந்து போவோர் பலர்
உங்கள் சொல்லுறுதி கண்டு வியந்தோம் யாம்
தேடாது கிடைத்த அமிழ்தம் போல்
வாராது வந்த மாமழை போல்
எதிர்பாராது உதவிக்கரம் தந்த வள்ளல் நீர்

மாறாது மாறாது உம் குணம் என்றும்
மறையாது மறையாது உம் புகழ் என்றும்
பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூற்றாண்டு
நீர் வாழ்வாங்கு வாழ்ந்திட
அகம் மகிழ்ந்து உளம் நிறைந்து வாழ்த்துகிறேன்


துன்பம்!

துன்பம்!

அது பல படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனை. அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர். ஒருவர் படுக்கை சன்னல் அருகில். இன்னொருவருக்கு சன்னல் கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர தனிமை.. தனிமை.. தனிமை..!

சன்னல் படுக்கை நோயாளிக்கு புற்றுநோய். இன்னொருவர் கடும் எலும்பு முறிவு நோயாளி. நாளடைவில் நட்பாகிவிட்டனர். ஒருமுறை எலும்பு நோயாளி சன்னல் நோயாளியிடம் சொன்னார்..

“உனக்காவது பொழுது போக்க, ஒரு சன்னல் இருக்கிறது.. எனக்கு அதுகூட இல்லை..!” கவலைப்படாதே நண்பா.. நான் சன்னலூடே என்னென்ன காண்கிறேனோ, அவ்வளவையும் உன்னிடம் விவரிக்கிறேன். இதை ஒரு ஒப்பந்தமாகவே கடைப்பிடிப்பேன்..!

அன்று முதல் சன்னல் நோயாளி, தான் கண்ட காட்சிகளை சுவைபட தன் நண்பனுக்குக் கூறலானார்.. நண்பா.. சன்னலுக்கு வெளியே ஒரு பெரிய ஏரி.. நடுவில் சிறு தீவு.. ஏரியில் படகுகள் மிதக்கின்றன.. ஏரிக்கரையில் அழகான பூங்கா..! காதலர்கள் தன்னை மறந்து கதைகள் பேசுகின்றனர்..!”

எலும்பு நோயாளிக்கு அப்படியே காட்சிகள் மனக்கண்ணில் விரியும்.. சன்னல் நோயாளி இன்னொரு நாள் சொல்வார்..

“ஏரிக்கரை ஓரமாக ஒரு சாலை.. அதில் மணப்பெண் அழைப்பு ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது.. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடித் திரிகின்றன. மணப்பெண்ணிடம் தோழி ஏதோ சொல்கிறாள்.. மணப்பெண் முகத்தில் அப்படி ஒரு வெட்கம்..!”

ஊர்வல அரவங்கள் எதுவும் எலும்பு நோயாளிக்கு கேட்கவில்லையாயினும் நாதசுரமும், தவிலும் ஒலிக்க ஊர்வலம் போகும் காட்சியை நன்கு அனுபவிப்பார்..

ஒருநாள் சன்னல் நோயாளி செத்துப்போனார்..

மீண்டும் எலும்பு நோயாளிக்கு வெறுமை ஒருநாள் செவிலி வந்தபோது, தன் படுக்கையை சன்னல் ஓரமாக மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்ள, அவ்வாறே செய்யப்பட்டது.

இனி எனக்கு நன்கு பொழுது போகும் என்று எண்ணியவாறே.. தன் எலும்பு முறிவு வலியையும் பொருட்படுத்தாமல் மெல்ல தன் உடலை உயர்த்தி சன்னல் வழியே நோக்க. அங்கே பெரிய சுவர்..! வேறு எதுவுமே இல்லை..!

அப்படியானால் சன்னல் நோயாளி சொன்ன கதைகள்?

மறுநாள் செவிலி வந்தவுடன், நடந்தவற்றை எலும்பு நோயாளி கூறினார்..செவிலி, எலும்பு நோயாளிக்கு ஊசி மூலம் மருந்தை ஏற்றியபடியே சொன்னாள்..

நீங்கள் பார்க்கும் சுவர் கூட அவருக்கு தெரிந்திருக்காது.. புற்றுநோயின் தாக்கத்தால் அவர் பார்வையை எப்போதோ இழந்துவிட்டிருந்தார்..!”

நீதி : தன் துன்பங்களை மறைத்துக்கொண்டு மற்றவர்களை உற்சாகப்படுத்தும் மிகச்சில மனிதர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அவர்களைப் போற்றாவிட்டாலும் பரவாயில்லை.. குறைகூறாதீர்கள்..!




குயில் டாக்டர்!

                         குயில் டாக்டர்!

கற்பூரவள்ளி என்ற காட்டில் ஆந்தை குடும்பம் ஒன்று வாழ்ந்து வந்தது. ஆந்தைக்கு இரண்டு ஆந்தை குஞ்சுகள் இருந்தன. தன் குஞ்சுகளை பேணி பராமரித்து வளர்த்தது தாய் ஆந்தை. குஞ்சுகள் வளர வளர அம்மாவிடம் பல கேள்விகள் கேட்க ஆரம்பித்தன.

ஒரு நாள், “அம்மா எல்லாரும் பகலில்தான் சுறுசுறுப்பாக உலாவிக் கொண்டிருக்கின்றனர். நாம் மட்டும் பகலில் துõங்கிவிட்டு இரவில் இரை தேடுகிறோம். நாம் சென்று இரை தேடும் வேளையில் ஊரே உறங்கி கொண்டிருக்கிறது. இது ஏன்?” என்றது.

“நமக்கு பகலில் கண் தெரியாது. இரவில்தான் கண் தெரியும். அத னால் தான் நாம் பகலெல்லாம் துõங்கிவிட்டு இரவில் சென்று இரை தேடுகிறோம்,” என்றது தாய் ஆந்தை.

“ஏனம்மா கடவுள் நம்மை மட்டும் இப்படி படைத்துவிட்டார்?” என்று கேட்டது இன்னொரு ஆந்தை குஞ்சு.

“கடவுள் நம்மையெல்லாம் ஒரே மாதிரிதான் படைத்தார். முன்னொரு காலத்தில் நம்முடைய முன்னோர்களில் ஒருவர் செய்த தவறைத்தான் நாம் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்,” என்றது தாய் ஆந்தை.

“அப்படி என்ன தவறு செய்தார்?” என்று கேட்டன குஞ்சுகள்.

“ஒரு முறை நம் முன்னோர் ஒருவர் காகம் ஒன்றிடம் மிகவும் நட்பாக இருந்தார். ஒரு நாள் அந்த காகத்திற்கு உடல்நிலை மிகவும் சரியில்லை. எனவே, அதை அழைத்து கொண்டு காட்டில் டாக்டராக இருந்த குயில் டாக்டரிடம் சென்றனர்.

“குயில் டாக்டரோ நன்றாக வைத்தியம் பார்த்து காக்காவை குணமாக்கிவிட்டது. அதன் பிறகு டாக்டருக்கு பீஸ் கொடுக்கணும் இல்லையா? ஆனால், இவர்கள் இருவரும் கொடுக்கவில்லை. எனவே, குயில் டாக்டர் எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுங்கள் என்று கேட்டது.

“இவர்கள் இருவரும் எங்களிடம் பணம் இல்லை என்று சொல்லிவிட்டு ஓடி வந்துவிட்டனர். அதன் பிறகு இவர்கள் இருவரையும் பார்க்கும் பொழுதெல்லாம் பணம் கேட்க ஆரம்பித்தது குயில் டாக்டர். ஏதுடா தொல்லையாப்போச்சு என்று நினைத்த நம்முடைய பாட்டனாரான ஆந்தையார், பகலில் தலைகாட்டுவதே இல்லை. இரவில் மட்டுமே வெளியே வருவதும் இரையை பிடித்து தின்பதுமாக இருந்திருக்கிறார்.

“பகல் முழுவதும் மரப் பொந்துகளில் படுத்து நன்கு துõங்குவது... இரவில் எழுந்து வெளியே செல்வது... இப்படியே இருந்ததால் ஆந்தையாரை கண்டுபிடிக்க முடியவில்லை குயில் டாக்டரால். அதனால் ஆத்திரமடைந்த குயில் டாக்டர், காக்காவை பிடித்து நன்கு திட்டியிருக்கிறது.

“அந்த திருட்டு காக்கா கடுமையாக வேலை செய்தாவது டாக்டர் பீசை கொடுத்திருக்க வேண்டியதுதானே... அப்படி கொடுக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட குயில் டாக்டர், இனிமேல் எங்கள் இனத்தார் இடும் முட்டைகளை எல்லாம் உன் இனத்தார் தான் காவல்காக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டது.

“அன்றிலிருந்து குயில் இனத்தார் அனைவரும் காக்கையின் கூட்டில் தங்கள் முட்டைகளை இட்டுவிட்டு சென்று விடுவர். அது குயிலின் முட்டை என்பது தெரியாமலே காக்கை இனம் வளர்த்து கொண்டு வருகிறது.

“நம்முடைய இனத்தார் பகலில் தூங்கி தூங்கியே நமக்கு பகலில் கண் தெரியாமல் போய்விட்டது. இதுதான் கதை,” என்றது தாய் ஆந்தை.

“அம்மா பிறரை ஏமாற்றுவதால் ஏற்படும் கஷ்டம் காலம் காலமாக பலரை பாதிப்பதை புரிந்து கொண்டோம். இனிமேல் நாங்கள் ஒருகாலும் இப்படிப்பட்ட காரியத்தை செய்யவே மாட்டோம்,” என்றனர்.

செல்லமாக தன் குஞ்சுகளை அணைத்து முத்தமிட்டது தாய் ஆந்தை.



உடைந்த பானை!

 

உடைந்த பானை!

ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.

இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.

குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.

இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.

"ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்"

அதற்கு விவசாயி, "பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"

இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது

நீதி : அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.



புதன், 12 செப்டம்பர், 2012

Photo