வெள்ளி, 30 மே, 2014

உலகைமாற்றக்கூடிய வழிகள் சில!



உலகைமாற்றக்கூடிய வழிகள் சில!

1. அழுகின்றவர்களுக்கு தோள்
கொடுங்கள்.

2. உங்கள் பழைய நல்ல துணிகளை சுத்தம்
செய்து இயலாதவர்களுக்கு
தானமளியுங்கள்.

3. இரத்தம் தானமளியுங்கள்

4. வாழ்கையின்
ஒவ்வொரு நொடியையும்
ரசித்து வாழுங்கள்.

5. தினமும் துணிச்சலான
ஒரு செயலை செய்யுங்கள்.

6. அனைவரிடமும் ஏற்றத்
தாழ்வு பார்க்காமல் சரி சமமாக
பழகுங்கள்.

7. உங்கள்
சுற்றத்தார்களை உற்சாகப்படுத்துங்கள்,
அவர்களை தட்டிக் கொடுங்கள்.

8. யாரையும் பார்க்கும்
பொழுது கண்களால்
சிறிது புன்னகை பூத்திடுங்கள்.

9. உங்கள் வாழ்க்கை அகராதியில்
இருந்து பிடிக்காது, முடியாது, என்ற
வார்த்தையை அழித்து விடுங்கள்.

10. உங்கள்
திறமைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

11. உங்கள் வாழ்க்கையில்
உங்களுக்கு துரோகம்
செய்தவர்களை மனப்பூர்வமாக
மன்னியுங்கள். மேலும்
அவர்களுக்காக பிராதித்துக்கொள
்ளுங்கள்.

12. வயதானவர்களுக்கு,
இயலாதவர்களுக்கு உங்கள்
இருக்கையை விட்டுக்கொடுங்கள்.

13. நல்ல செய்திகளை உலகிற்குஉரக்க
சொல்லூங்கள்.

14. நீண்ட நாளைய நண்பனை கண்டவுடன்
அவர்களை
தளுவிக்கொள்ளுங்கள், அவர்கள் முதுகில்
தட்டிக் கொடுங்கள்.

15. உங்களை இதயப்பூர்வமாக,
ஆத்மப்பூர்வமாக ஆழமாக நம்புங்கள்,
பின்னர் உலகம் உங்களை நிச்சயம்
கண்டுக்கொள்ளும் மேலான
அங்கீகாரத்தை கொடுக்கும்
என்பதை மறக்காதீர்கள்.

16. கோபம், பொறாமை கொள்ளாதீர்கள்.

17. தோல்வியுற்றவர்களுக்கு ஆறுதலாய்
இருங்கள்.

18. நூலகங்களுக்கு உங்களால் முடிந்த
புத்தகங்களை பரிசளியுங்கள்,
இயலாதவர்கள் அதனால் பயனடைவார்கள்.

19. மரங்கள், பூச்செடிகளை நடுங்கள்.

20. மக்களையும் அவர்களின் போக்கையும்
விரும்புங்கள், அவர்கள் என்னதான்
ஊமையாய் இருந்தாலும், ஒன்றுப்படாமல்
இருந்தாலும் சரி காலம் அதற்கான
சந்தர்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்
என்பதை மறக்காதீர்கள்.

21. ஜாதி, மதம், இனம்
பாகுபாடு பார்க்காமல் பழகிடுங்கள்,
அவ்வாறு உங்கள் சுற்றத்தார் இருப்பின்
ஒரு குறுகிய வட்டத்திற்குள்
இருக்கிறார்கள்
என்றெண்ணி விலகிவிடுங்கள்.

22. தெருவில் அனாதையாய் திரியும்
குட்டி நாய்களுள்
ஒன்றினை தேர்ந்தெடுத்து அதனை வளர்த்திடுங்கள்
(இருக்கும் காலம்
வரை உங்களுக்கு நன்றியுடன்
இருக்கும்).

23. நீங்கள் இவ்வுலகம் எவ்வாறு இருக்க
வேண்டும்
என்று எண்ணுகிறீர்களோ அவ்வாறே அதனை காணுங்கள்,
உங்களால் மற்றவர்களும் மாறுவார்கள்
உலகமும் தன்னை நிச்சயம்
மாற்றிக்கொள்ளும்
அல்லது மாற்றத்தை ஏற்படுத்தும்
சூழ்நிலையை உருவாக்கும்.

24. இதுபோன்ற நல்ல
விடையங்களை மற்றவருடன்
பகிர்ந்து கொள்ளுங்கள்.


அறிவு



எதிர்காலத்தில் நேரம் கிடைத்தால் சந்தோசமாக இருக்கலாம் என்று எண்ணியபடி பலர் தங்கள் வாழ்வை எதிர்பார்ப்பிலேயே வைத்திருக்கிறார்கள். ஆனால் நிகழ்காலம் மற்ற காலங்களைவிட மேலானது என்பதை பலரது அறிவு கண்டு பிடிக்காமலே இருக்கிறது.

வண்ணத்து பூச்சி



# படித்ததில் பிடித்தது #
மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!!
கணவன்: என்ன?
மனைவி: யார் இந்த
உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக
இருக்கா? நீயா?? நானா???

கணவன்: இதுல என்ன சந்தேகம்… நான்
தான்!!!

மனைவி: எப்படி சொல்ற? நீ காலைல
வேலைக்கு போனா, இரவு தான் வர..
உனக்கு தான் உலகத்தை ரசிக்க
நேரமே இல்லையே….

கணவன்: ம்ம்.. சரி, உனக்கு ஒரு நாள்
முழுவதும் நேரம் தரேன் உனக்கு என்ன
என்ன பண்ணனும்னு தோணுதோ எல்லாம்
செய், நாளைக்கு இரவு நான் பதில்
சொல்றேன்..

(மறுநாள் இரவு)
கணவன்: ஏய்… இன்று என்னலாம் பண்ண?
மனைவி:
அதிகாலை பனித்துளியோடு விளையாடினேன்,
பூக்களை ரசித்தேன்,
கோவிலுக்கு போனேன், அம்மா, அப்பா,
நண்பர்களோடு பேசினேன்,
நமது கல்யாண ஆல்பம் பார்த்தேன்,
நமக்கு பிடித்த பாடல்கள் கேட்டேன்,
கவிதைகள் படித்தேன், கார்ட்டூன்
நெட்வொர்க் பாத்தேன்,
மாலை கடற்கரைக்கு சென்று அலைகளின்
அமைதியில் கரைந்தேன்,
இன்று மாலை பெய்த, மழையிலும்
நனைந்தேன், நீ வர நேரம் ஆனதால்
மொட்டை மாடியில்
பௌர்ணமி நிலவின் அழகையும்
ரசித்தேன், அனால் ஒன்னு தான் பன்னல….
இந்தா உம்மா…. இதோ என்
செல்லத்தையும் முத்தமிடுவிடேன்…
எனக்கு இந்த உலகத்தையே சுற்றிவந்த
மாதிரி இருக்கு… இப்ப சொல்லு யார்
அதிக மகிழ்சியா இருக்காங்கனு???
கணவன்: இப்பவும் சொல்றேன்,
எனக்கு தான் அதிக மகிழ்ச்சி…

மனைவி: ம்ம்… எப்படி டா!!!
கணவன்: அட முட்டாள்,
உலகத்தை பலமுறை சுற்றி, அதில் உள்ள
அணைத்து அழகான பூக்களில் இருந்தும்
தேனை சேகரித்து, என் இதழ்களில்
வந்து சிந்திவிட
வண்ணத்து பூச்சி போல, என் தோள்களில்
சாய்ந்து நீ கொடுத்த ஒரு முத்தத்தில்
அடைந்துவிட்டேன் உன்னைவிட
நூறு மடங்கு மகிழ்ச்சியை…
நல்ல வேளை, ஒருவன் வாழ்வில்
இவ்வளவு மகிழ்ச்சிதான் இருக்க
வேண்டும்
என்று வரைமுறையை கடவுள்
விதிக்கவில்லை, இல்லையெனில் நீ
முத்தமிட்ட நொடியில் சென்றிருப்பேன்
நரகத்திற்கு…

மனைவி: நரகமா???
கணவன்: (நீ இல்லாத சொர்கமும், நரகம்
தானடி எனக்கு…), உனக்கு இந்த
உலகத்தையே சுற்றி வந்தமாதிரி இருந்தது என்று சொன்னாய்,
எனக்கு என்
உலகமே என்னை சுற்றி வந்து முத்தமிட்ட
மாதிரி இருந்தது…. இப்பொழுது சொல்
யாருக்கு அதிக மகிழ்ச்சி?????

(வெட்கத்தில் இன்னும்சில
தேன்துளிகளை சிந்தியது,
வண்ணத்து பூச்சி...)

வியாழன், 29 மே, 2014


புதன், 28 மே, 2014