சனி, 23 ஜனவரி, 2016

24.01.2016 sunday



நமதாண்டவர் இயேசுவின் பணி
–லூக்கா 1 : 1-4, 4:14-21
2016ம் வருட பொதுக்கால மூன்றாம் வார ஞாயிறு - ஜனவரி – 24

இவ்வுலகில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் ஏதோ ஒருவித இறை அழைப்போடேயே பிறப்பதாக மூத்தோர்கள் தெரிவிப்பார்கள். இரக்கத்தின் ஆண்டில் கால் பதித்துள்ள நாம் நமதாண்டவர் இயேசுவின் பணியினைத் தொடர அழைக்கப்பட்...
டுள்ளோமென லூக்கா நற்செய்தி தெரிவிக்கின்றது (லூக்கா 4:14-21) என்பது எனது பணிவான அபிப்பிராயம்.

எல்லாம் வல்ல இறைவன், தமது திட்டத்தை இவ்வுலகில் நிறைவேற்றவே தமது கைக் களிமண் மூலமாக எம்மைப் படைத்துள்ளாரென நாங்கள் விசுவசிக்கின்றோம். நமதாண்டவர் இயேசுவின் உடலாகவும், உறுப்புக்களாகவும் நாமனைவரும் படைக்கப்பட்டுள்ளதனை மறுப்போமாயின் எமது கத்தோலிக்க கிறிஸ்தவ விசுவாசம் பொருளற்றதாகிவிடும்.

பழைய ஏற்பாட்டில் மட்டுமல்ல, புதிய ஏற்பாட்டிலும் இறை ஆவியாரது வல்ல செயல்கள் நமதாண்டவர் இயேசுவிலும், அன்னை மரியா உட்பட திருச்சீடர்கள், மற்றும் புனிதர்களிலும் செயற்பட்டது. அதே ஆவியானவர் எம்மிலும் செயற்படுகிறாரென நாம் வேறுவிதமாகச் சிந்திக்கவும் இன்றைய நற்செய்தி எமக்கு அழைப்பு விடுக்கின்றது.

குழந்தைப் பருவ முதல் நமதாண்டவர் இயேசுவிடம் நற்பண்புகளும், ஞானமும் நிறைந்திருந்தது. எனினும், நமதாண்டவர் இயேசுவின் வல்லமை மட்டுமல்ல, பரலோக தகப்பனில் அவருக்கிருந்த இறைப்பற்றையும் எமக்குத் தெளிவுபடுத்தி, நமதாண்டவர் இயேசுவின் இவ்வுலகப்பணி எதுவென லூக்கா நற்செய்தியாளர் (லூக்கா 4:14-21) எம்மோடு பகிர்ந்து கொள்கின்றார்.

நமதாண்டவர் இயேசு வழக்கத்தின்படி ஓய்வு நாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்ததாக நற்செய்தியில் தெரிவிப்பது, அன்னை மரியா தம் அன்பு மகனை நல்ல பழக்கங்களோடு, இறை அருள் நிறைந்தவராக வளர்த்ததை (லூக்கா 4:14-16) உறுதி செய்கின்றது. எனினும் எமது பிள்ளைகளை எவ்வாறு நாம் வளர்க்கிறோமெனவும் வேறுவிதமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது.

“ஆண்டவருடைய ஆவி என்மேல் உள்ளது ஏனெனில், அவர் எனக்கு அருள் பொழிவு செய்துள்ளார்“ (லூக்கா 4:18) என, நமதாண்டவர் இயேசுவை எம்மைப் பாவத்திலிருந்தும், சாவிலிருந்தும் விடுதலை செய்யும் மெசியாவாக நற்செய்தியாளர் லூக்கா அறிமுகப்படுத்துவது, நமதாண்டவர் இயேசுவின் பணி இன்றும் தொடருவதாக நாம் பொருள் கொள்ள முடியும்.

நாம் பெற்றுள்ள திருமுழுக்கு மற்றும் உறுதிப்பூசுதல் எனப்படும் அருட்சாதனங்கள் வழியாக எல்லாம் வல்ல இறைவனின் பரிசுத்த ஆவியானவர் எம்மீதும் இறங்கியுள்ளார். திருப்பலிகளில் நாம் பெறுகின்ற பரிசுத்த நற்கருணை வழியாக பரிசுத்த ஆவியின் செயல்பாட்டை எம்மீது நாம் உறுதி செய்கிறோமென அன்னையாம் திரு அவை எமக்குப் படிப்பிக்கின்றது.

எல்லாம் வல்ல இறைவனின் பரிசுத்த ஆவி நமதாண்டவர் இயேசுவின் மீது இறங்கியுள்ளதால் அவரை மனிதனாகவும், தெய்வமாகவும் நாம் ஏற்றுக்கொள்கிறோம். அதே இயேசுவையே திருப் பலிகளில் நாம் அப்ப இரச வடிவத்தில் பெற்றுக்கொள்வதனால் பரிசுத்த ஆவியானவர் எம்மோடும் வாழுகின்றார் என்பதனை நாம் மறுக்க முடியாதல்லவா?

நமதாண்டவர் இயேசு எமக்கறிவித்த நற்செய்திக்கமைவாக நாமனைவரும் விண்ணரசின் பங்காளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளோம். நமதாண்டவர் இயேசு தேடிச்சென்று போதித் தவர்களிடம் செல்வம் இருக்கவில்லை. சமூகத்தில் அவர்களுக்கு மதிப்பு மரியாதை இருக்கவில்லை. ஆனால் அவர்கள் இயேசுவின் நற்செய்திக்குச் செவிமடுத்தார்கள்.

இரக்கத்தின் ஆண்டில் வாழும் நாமும் நமதாண்டவர் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்கள் போன்று இறை வார்த்தைக்கு செவிமடுப்போம். அன்னை மரியாவைப்போல இதயத்தில் தாழ்ச்சியும், பணிவுமுடையவர்களாகி இறை வார்த்தையை நமதாக்க முயலுவோம்.

பரிசுத்த ஆவியின் வல்லமை வேண்டி இரக்கத்தின் ஆண்டில் விசேடமாகச் செபிப்போம். நமதாண்டவர் இயேசுவைப்போல பரிசுத்த ஆவியின் வல்லமையால் நிரப்பட்டு, நாம் பெற்றுக் கொண்ட நற்செய்தியின் செல்வத்தை அடுத்தவர்களோடு பகிர்ந்து, ஒவ்வொருவரையும் மனித மாண்போடு மதித்து வாழ முன்வருவோம். அப்போது எமக்கறிவிக்கப்பட்ட இறைவாக்கு நிறைவேறியதாக எமது பரலோக தகப்பன் எம்மில் மகிழ்வடைவார்.
Afficher la suite
– avec M Iranaippalai RC MV, Bena Bena, Antonysamy Samy et 42 autres personnesM Iranaippalai RC MV, Bena Bena, Antonysamy Samy, Jusaithamby Henry Retnaraja, F.x. Reegan, Shanthini Nagarajah, Joseph Packiyanathar, Arul Rajan, Benedict Asokan, StjemesChurch Nachchikkuda, Shara Christina Emmanuel, Bala Gilbert, Jeevaratnam Mylu, Christian Gate, Chandra Naathar, BroThomas Prem, Cicil Thavamani, Backiya Regis, Mary Sinthu, Tamil Katholieke Zielzorg Netherland, Susai Nathan, Sumithra Y M, Narmi Tharmathas, Ranjenee Savarimuthu, Palaniyandi Navarathnam, Manuel Sountha, Nalini Duba Rajendiram, Mullaitivu Parish, Dancy Sebasthiyampillai, Nithila Mariampillai, Nallur Dinesh, A Nilanthy Arul, Thayananthy Jonhnson, Christy Simeon, Tony Saveri, Mariamma Maheswaran, Emmanuel Saveenamma, Sinaarasa Rosamma, Kandsamy Lorance, Gurunagar Kennet, Sylvester Thambirasa, Latha Edward, Alphonse Ligoree Church Maruthadiyour, Antonippilai Nelsan et James Niranjan Anthonippillai.

வியாழன், 14 ஜனவரி, 2016

pongal