திங்கள், 20 பிப்ரவரி, 2012

துடிப்பதை அவன் செய்தான்


கோடி மனவருடகள் இருந்தாலும்
இநாடியில் ஆறுதல் தரும் நட்பே
காதலியிடம் சென்றேன்
அவள் கண்ணீரை கேட்டாள்
இறைவனிடம் சென்றேன்
அவன் காணிக்கை கேட்டேன்
குருவிடம் சென்றேன்
அவர் தட்சனை கேட்டான்
நண்பனிடம் சென்றேன்
அவன் கேட்கவில்லை
தன்னைத் தன்தான்
ஆம் ...இதயத்தை எனக்கு
தந்துவிட்டு
துடிப்பதை அவன் செய்தான்

தாயின் மடியில்...



படுத்துக்கொண்டே
சொர்கத்தை காணலாம்
தலையணையில் அல்ல‌
தாயின் மடியில்...

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

திருப்பி வராது...........

வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்
நீ பிறருக்கு உதவும் வரை......
வாழ்க்கை ஒரு புனித ஸ்தலம்
மற்றவர் உன்னை விரும்பும் வரை.....
வாழ்க்கை ஒரு சுதந்திர பறவை
நீ வாழ விரும்பும் பொழுது.......
வாழ்க்கை ஒரு இனிய பயணம்
நீ வாழ புறப்படும் நேரம்.......
வாழ்ந்து பார் நண்பனே(பியே) வாழ்க்கை
ஒரு வராகடன் - சென்றால்
திருப்பி வராது...........


கீதை...பைபிள்...குரான்


* உனக்கு உதவி செய்தவரை மறக்காதே..!! - கீதை

* உன்னை நேசித்தவரை வெறுக்காதே..!! - பைபிள்

* உன்னை நம்பியவரை ஏமாற்றாதே..!! - குரான்

பேரின்பமாகத் தெரியும்....


வாழ்க்கையில் சின்ன சின்ன
சந்தோசங்களையும் 
அனுபவித்து விடுங்கள்.
நாளை, ஒருவேளை,
திரும்பிப் பார்க்கையில்
அவை தவற விடப்பட்ட
பேரின்பமாகத் தெரியும்....

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

காலைப்பொழுது...!


வைகறைப் பொழுது
பூபாளம் இசைக்க
நிலவுப்பெண் விடைபெற
வானமங்கை போர்வை விலக்க
விடிகிறது காலைப்பொழுது...!

திங்கள், 13 பிப்ரவரி, 2012

வாழ்த்துக்கள் ....

மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும் போது,
சோகம் கூட சுகமாகும் வாழ்க்கை இன்ப வரமாகும்...
கலங்கமில்லா காதலர்களுக்கு என் காதலர் தின
வாழ்த்துக்கள் ....

இளைஞராக இருக்கிறீர்கள்


உங்கள் நம்பிக்கையைப் போலவே
இளையவராக இருக்கிறீர்கள்,
சந்தேகத்தைப் போலவே
முதியவராக இருக்கிறீர்கள்,
தன்னம்பிக்கையைப் போலவே
இளைஞராக இருக்கிறீர்கள்,
பயத்தைப் போலவே
முதியவராக இருக்கிறீர்கள்,
விசுவாசத்தைப் போலவே
இளைஞராக இருக்கிறீர்கள்

சனி, 11 பிப்ரவரி, 2012

இக்னோயஸ்


மாணவர்கள் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் அவர்கள் முன் வந்து இன்னமும் 20 நிமிடங்களில் உலகம் அழியப்போகிறது என்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார். எல்லோரும் தேவாலயத்தில் சென்று வழிபடுவோம் என்று கூறினார்கள். ஆனால் ஒரேயொரு சிறுவன் மட்டும் நான் தொடர்ந்து விளையாடி முடிப்பேன் என்றான். அவனே வாழ்வில் வெற்றிபெற்ற இக்னோயஸ் ஆகும்.

பரிதாபத்திற்குரியவர்கள்


 பணத்தை அதிகமாகத் தேடினால் செல்வந்தனாகலாம் என்று பலர் நினைக்கிறார்கள். அவர்கள் மிகவும் பரிதாபத்திற்குரியவர்கள், இருக்கும் ஆடம்பர வாழ்வை குறைத்து எளிமையாக்கினால் அதைவிட விரைவாக செல்வந்தனாகலாம்.

மக்கள் இயற்கையை நேசிப்பதில்லை


மக்கள் இயற்கையை நேசிப்பதில்லை..! வீடுகளையும், வசதிகளையும் பெருக்கிக் கொண்டு தங்களை அடிமைப்படுத்திக் கொள்கிறார்கள். பொருளாதார இலாபத்தைத் தேடி அலைந்து இயற்கையோடு இணைந்த அழகான வாழ்வை தொலைத்துவிடுகிறார்கள்.
பணத்தைக் குவிப்பது, பொக்கிஷங்களை நிறைப்பதைவிட மேலான விடயங்கள் இந்தப் பூமியில் இருக்கின்றன. உலகின் ஞானமுள்ள மனிதர்கள் மிக எளிமையான வாழ்வைத்தான் வாழ்ந்துள்ளார்கள்.
அடுத்தவர் நினைப்பதையே நாம் செய்ய வேண்டுமென நினைத்து வாழ்ந்தால் ஒருநாள் இந்த வாழ்க்கை நம் கையைவிட்டு தொலைந்து போயிருப்பதைப் பார்ப்போம்.

வியாழன், 9 பிப்ரவரி, 2012

மதிப்பு கிடையாது

உள்ளத்தின் ஒழுங்குமுற்றிலும் குலைந்திருந்தால், நாம் புறத்தில் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது.
பிறரைச் சீர்திருத்தும் முயற்சியைவிட, தன்னை சீர்திருத்திக் கொள்வதே முதற்கடமை
ஒழுங்கு தவறிய இடத்தில் பயன் இருந்தாலும் மதிப்பு கிடையாது


அன்னை..தந்தை

அன்னை என்ற பாச மழை
என்னை நிதமும் நனைத்தது
தந்தை எனும் உயிர் காற்று
என் சுவாசத்தை இயக்கியது